sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

புதுமை பெண் திட்டம்; 11,174 மாணவியர் பயன்

/

புதுமை பெண் திட்டம்; 11,174 மாணவியர் பயன்

புதுமை பெண் திட்டம்; 11,174 மாணவியர் பயன்

புதுமை பெண் திட்டம்; 11,174 மாணவியர் பயன்


ADDED : ஏப் 04, 2025 03:14 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 03:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; தமிழக அரசு, புதுமைப்பெண் திட்டத்தில், கல்லுாரி மாணவியருக்கும், தமிழ் புதல்வன் திட்டத்தில், மாணவர்களுக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கிவருகிறது. திருப்பூர் மாவட்டத்தில், புதுமைப்பெண் திட்டத்தில், கல்லுாரி மாணவியர் 11,174 பேருக்கும்; தமிழ் புதல்வன் திட்டத்தில் 7,646 மாணவர்களுக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வீதம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2022 - 23ம் ஆண்டில், 3,485 மாணவியருக்கு; 2023 - 24ம் ஆண்டில், 3,622 மாணவியருக்கு; 2024 - 25ம் ஆண்டில், 4,067 மாணவியருக்கு என, 71 கல்லுாரிகளில் படிக்கும், 11,174 மாணவியருக்கும்; தமிழ் புதல்வன் திட்டத்தில், 2024 - 25ம் ஆண்டில் இதுவரை, 58 கல்லுாரிகளில் படிக்கும், 7,646 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுவருவதாக, கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழ் புதல்வன் திட்டத்தில் உதவித்தொகை பெற்று, சிக்கண்ணா அரசு கல்லுாரியில் விலங்கியல் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் நவீன்குமார்; புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெற்றுவரும் காங்கயம் இன்ஸ்டிடியூட் ஆப் காமர்ஸ் கல்லுாரி மாணவி மகாலட்சுமி ஆகியோர், அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us