/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதுமைப்பெண் திட்டம்; 7,069 மாணவியர் பயன்
/
புதுமைப்பெண் திட்டம்; 7,069 மாணவியர் பயன்
ADDED : நவ 05, 2024 11:22 PM
திருப்பூர் ; திருப்பூர் மாவட்டத்தில், புதுமைப்பெண் திட்டத்தில், கடந்த 2022 - 23ம் ஆண்டில், 1,249 மாணவியர்; 2023 - 24 நிதியாண்டில், 2,989 மாணவியரும்; நடப்பு 2024 - 25 ஆண்டில் இதுவரை, 2,831 மாணவியர் என, மொத்தம் 7,069 மாணவியருக்கும்; தமிழ் புதல்வன் திட்டத்தில், நடப்பு 2024 - 25 ம் ஆண்டில் இதுவரை, 4,608 மாணவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெற்றுவரும் சிக்கண்ணா கல்லுாரி மூன்றாம் ஆண்டு விலங்கியல் பிரிவு மாணவி ஜெயலட்சுமி; அதே கல்லுாரியில் விலங்கியல் இரண்டாம் ஆண்டு படித்து, தமிழ் புதல்வன் திட்டத்தில் உதவித்தொகை பெறும் மாணவர் சதீஷ் ஆகியோர், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

