/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சந்தை வளாகத்தில் ஆக்கிரமிப்புகளால் நெரிசல்; தீர்வு காண வலியுறுத்தல்
/
சந்தை வளாகத்தில் ஆக்கிரமிப்புகளால் நெரிசல்; தீர்வு காண வலியுறுத்தல்
சந்தை வளாகத்தில் ஆக்கிரமிப்புகளால் நெரிசல்; தீர்வு காண வலியுறுத்தல்
சந்தை வளாகத்தில் ஆக்கிரமிப்புகளால் நெரிசல்; தீர்வு காண வலியுறுத்தல்
ADDED : செப் 23, 2024 10:55 PM

உடுமலை, ; உடுமலை நகராட்சி தினசரி சந்தையில், ஆக்கிரமிப்புகளை அகற்றி, மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
உடுமலை நகராட்சி சந்தையில், தினசரி காய்கறி ஏலம் நடத்தப்படுகிறது. சுற்றுப்புற பகுதிகளிலுள்ள கிராமங்களில் விளையும் காய்கறிகளை ஏல முறையில் விற்பனை செய்ய விவசாயிகள் கொண்டு வருகின்றனர்.
அதே போல், 350க்கும் மேற்பட்ட தினசரி காய்கறி, மளிகை மற்றும் பழங்கள் விற்பனை கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. குறுகிய பரப்பில் சந்தை அமைந்துள்ள நிலையில், மக்கள் பயன்படுத்தும் பிரதான ரோடுகளை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதே போல், காய்கறி கமிஷன் மண்டிகள் பெருமளவு இடத்தை ஆக்கிரமித்து, கடைகள் அமைத்துள்ளதால், சந்தை வளாகத்தில் நெரிசல் நிரந்தரமாக உள்ளது. வாகனங்கள் உள்ளே நுழைய முடியாததோடு, காய்கறிகளை இறக்கி வைக்க முடியாத நிலையும் உள்ளது.
எனவே, காய்கறி, கமிஷன் மண்டிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கடைகளுக்கு உரிய இடங்களை மட்டும் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
அதே போல், தினசரி கடைகளையும் வரைமுறைப்படுத்தி, பிரதான ரோடு மற்றும் வழித்தடங்களை மீட்க வேண்டும்.
தினமும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள் வந்து செல்லும் நிலையில், ஆக்கிரமிப்புகளால் கடும் பாதிப்பு ஏற்படுகிறது.
பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் சந்தை வளாகத்தில், எளிதில் தீப்பற்றும் வகையில், ஆக்கிரமிப்பு கூரைகளும் அமைக்கப்பட்டுள்ளதால், தீ விபத்து உள்ளிட்ட அபாயமும் உள்ளது.
எனவே, சந்தை வளாகத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, கடைகள் ஒதுக்கீடு செய்யவும், மக்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் வழித்தடங்களை உருவாக்க வேண்டும்.
மேலும், சந்தையில், குடிநீர், கழிப்பிடம், இருக்கை, வாகனங்கள் நிறுத்தும் மையம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் செய்து தர நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.