/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வலியுறுத்தல்
/
அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வலியுறுத்தல்
ADDED : அக் 21, 2024 06:47 AM
உடுமலை : உடுமலை அரசு மருத்துவமனையை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டகிளை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உடுமலையில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வட்ட கிளை மாநாடு நடந்தது. கிளை தலைவர் விவேகானந்தன்தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெகதீஸ்வரன் வரவேற்றார்.
மாவட்ட இணை செயலாளர் வைரமுத்து முன்னிலை வகித்தார். செயலாளர் வெங்கிடுசாமி வேலை அறிக்கையும், வட்டகிளை இணை செயலாளர் எலிசபெத் அஞ்சலி தீர்மானமும் வாசித்தனர்.
கூட்டத்தில், 'புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பயனளிப்பு ஓய்வு திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
சத்துணவு, அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள் ஊர்ப்புற நுாலகர்கள் எம்.ஆர்.பி., செவிலியர்கள் அனைவருக்கும் முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
உடுமலை அரசு மருத்துவமனையை, மீண்டும் மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி வசதிகளை மேம்படுத்த வேண்டும், உடுமலை பஸ் ஸ்டாண்டில் கழிப்பிடங்களை சுத்தப்படுத்தி, சுகாதாரத்துடன் பராமரிக்க வேண்டும்,
அரசு கலைக்கல்லுாரியில், கூடுதல் இடங்கள் மற்றும் கூடுதல் பாடப்பிரிவுகளை துவக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளிட்ட 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார்.
வட்டக்கிளை மாநாட்டில், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.