/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை பணி ஆய்வு
/
மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை பணி ஆய்வு
ADDED : மார் 22, 2025 07:00 AM
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 'அம்ரூத்' திட்டத்தில், பாதாள சாக்கடை திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், மாநகராட்சி பகுதியில் முந்தைய திட்டத்தின் போது விடுபட்ட பகுதிகளில், இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், மாநகராட்சி விரிவாக்கத்தின் போது, இணைக்கப்பட்ட பகுதிகளிலும் செயல்படுத்தும் வகையில் பணிகள் திட்டமிட்டு நிறைவு பெற்றுள்ளது. இதில், கட்டப்பட்டுள்ள ஆண்டிபாளையம் மற்றும் எஸ்.பெரியபாளையம் பகுதி சுத்திகரிப்பு மையங்களும் சோதனை ஓட்டம் நடத்தி செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இருப்பினும் பிரதான குழாய்கள் பதித்த பகுதிகளில் ரோடு சீரமைப்பு செய்வது; பல்வேறு பகுதிகளில் வீட்டு இணைப்புகள் வழங்குவது போன்ற பணிகள் நிறைவு பெறாமல் உள்ளன.
சில பகுதிகளில் புதிதாக போடப்பட்ட ரோடுகள் சேதமடைந்து கிடக்கிறது. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட சில இடங்களில், குழாய் பதிப்பு பணிகள் மேற்கொள்ளாமல் ரோடு போடும் பணியும் நின்று விட்டது.
இதுபோன்ற பிரச்னைகள் மாநகராட்சி நிர்வாகத்துக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்துவதாக உள்ளது. இத்திட்டப் பணிகள் நிலை குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. மேயர் தினேஷ்குமார் தலைமை வகித்தார்.
துணை கமிஷனர் சுந்தரராஜன், முதன்மை பொறியாளர் செல்வநாயகம் முன்னிலை வகித்தனர். பொறியாளர் பிரிவு அலுவலர்கள், ஒப்பந்த நிறுவன அலுவலர்கள் கலந்து ெகாண்டனர்.
பகுதிவாரியாக பணிகள் நிலை குறித்து ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது.