/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நில ஆவணங்களில் திருத்தம் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
/
நில ஆவணங்களில் திருத்தம் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
நில ஆவணங்களில் திருத்தம் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
நில ஆவணங்களில் திருத்தம் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
ADDED : மே 15, 2025 11:58 PM
உடுமலை,; பட்டாவில் பெயர் நீக்கம் மற்றும் சேர்க்க இ-சேவை மையங்கள் மற்றும் 'சிட்டிசன் போர்ட்டல்' வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம், என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் உள்ள, நகரம், கிராமங்களிலுள்ள நிலங்களின், நில ஆவணங்கள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு இணையவழியில் மக்கள் எளிதில் பார்க்கும் வகையிலும், அச்சிட்டு பயன்படுத்தும் வகையிலும், https//eservices.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
இருப்பினும், பல சிட்டாவிலுள்ள பட்டாதாரர்களில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமலும், அவர்களின் பெயர்களுக்கு பதிலாக வாரிசுதாரர்களின் பெயர்கள் அல்லது தற்போதைய உரிமையாளர்களின் பெயர்கள் சேர்க்கப்படாமலும் உள்ளன. மேலும், பல சிட்டாக்களில் பெயர் குழப்பங்கள் காணப்படுகிறது.
இதற்கு தீர்வு காண, தற்போது இ- -சேவை மையங்கள் வாயிலாகவும், 'சிட்டிசன் போர்ட்டல்' வாயிலாக நேரடியாக, பட்டாவிலுள்ள இறந்த நில உடமையாளர்களின் பெயர்களை நீக்கி, அவர்களது வாரிசுகளின் பெயர்களை சேர்க்கவும், விற்பனை வாயிலாக பதிவு செய்யப்பட்ட ஆவணம் வாயிலாக, உரிமை பெற்றவர்களின் பெயர்களை சேர்க்கவும், உரிய ஆவணங்கள் வாயிலாக விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தற்போது விண்ணப்பித்தால், உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு, வரும் ஜமாபந்தியில் உத்தரவுகள் வழங்கப்படும், என வருவாய்த்துறைஅதிகாரிகள் தெரிவித்தனர்.