/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி கவனமுடன் இருக்க வேண்டும்: அ.தி.மு.க., கூட்டத்தில் அறிவுறுத்தல்

ADDED : நவ 09, 2025 12:13 AM

பல்லடம்: திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், பல்லடம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கூட்டம், பல்லடத்தில் நேற்று நடந்தது.
புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். அமைப்புச் செயலாளர் ஆனந்தன் வரவேற்றார். மாவட்ட பொறுப்பாளர்கள் அர்ஜுனன், விக்னேஷ் மற்றும் நகர செயலாளர் ராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் நடராஜன், சித்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ராதாகிருஷ்ணன் பேசியதாவது, “பல்லடம் சட்ட சபை தொகுதிக்கு உட்பட்ட வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியங்களின் கீழ், 213 பூத்கள் உள்ளன. இவற்றுக்கு, 110 வாக்குச்சாவடி முகவர்கள் வந்துள்ளீர்கள்.
அடுத்த, 4 மாதம் முழுமையான தேர்தல் பணி செய்ய வேண்டும். முதலில், நம் வீட்டில் படிவம் தருகிறார்களா என்று பாருங்கள். அதன் பின், நமது உறவினர்கள், நண்பர்கள் பெயர் சேர்க்கப் படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். ஏனெனில், தி.மு.க.,வினர் மொத்தமாக படிவங்களை வாங்கிச் சென்று முறைகேட்டில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.
எனவே, ஒவ்வொரு வாக்குச்சாவடி முகவர்களும் தீவிரமாக கண் காணியுங்கள். பூத்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், அதற்கு ஏற்ப பணிகளை நாம் வேகப்படுத்த வேண்டும்.
பல்லடம் தொகுதியில், ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் நாம் வெற்றி பெற்றாக வேண்டும். வழக்குகளை எதிர்கொள்ள தேவையான வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவர்”இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, வாக்குச்சாவடி முகவர்கள் அனைவரும் வந்துள்ளார்களா என்பது குறித்த பட்டியல் சரிபார்க்கப்பட்டது. தொடர்ந்து, அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது.