/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிற மாநில குழந்தைகளுக்கும் தமிழ் கற்பிக்க அறிவுறுத்தல்
/
பிற மாநில குழந்தைகளுக்கும் தமிழ் கற்பிக்க அறிவுறுத்தல்
பிற மாநில குழந்தைகளுக்கும் தமிழ் கற்பிக்க அறிவுறுத்தல்
பிற மாநில குழந்தைகளுக்கும் தமிழ் கற்பிக்க அறிவுறுத்தல்
ADDED : ஜன 21, 2025 10:20 PM
உடுமலை,; பிற மாநில குழந்தைகளுக்கும், அரசுப்பள்ளிகளில் தமிழ் பயிற்றுவிக்க, பள்ளி நிர்வாகத்தினர் தீவிரம் காட்ட வேண்டுமென கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
கிராமப்பகுதியில் பல்வேறு தொழிற்சாலைகள், பண்ணைகளில் பிற மாநிலத்தைச்சேர்ந்த குடும்பத்தினர் பணி செய்கின்றனர். அவர்களின் குழந்தைகள், அப்பகுதியிலுள்ள அரசுப்பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். தற்போது, இவ்வாறு அரசுப்பள்ளிகளில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு, தமிழ் பயிற்றுவிக்க தீவிரம் காட்ட வேண்டுமெனவும், சேர்க்கையை ஊக்குவிக்க வேண்டுமென கல்வித்துறை பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
பிற மாநில குழந்தைகள் அரசுப்பள்ளியில் சேர்ந்து படிக்கவும், அரசு நடத்தும் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றால் அவர்களுக்கு உதவித்தொகை, பரிசுகள் மற்றும் இதர சலுகைகள் வழங்குவதற்கும், தலைமையாசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதன்படி, உடுமலை சுற்றுப்பகுதியில், பிற மாநில குடும்பங்கள் இருக்கும் பகுதிகளில், ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தயாராகியுள்ளனர்.