/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பிரதமரை கொச்சைப்படுத்துவதா? போலீஸ் அனுமதிக்கக்கூடாது'
/
'பிரதமரை கொச்சைப்படுத்துவதா? போலீஸ் அனுமதிக்கக்கூடாது'
'பிரதமரை கொச்சைப்படுத்துவதா? போலீஸ் அனுமதிக்கக்கூடாது'
'பிரதமரை கொச்சைப்படுத்துவதா? போலீஸ் அனுமதிக்கக்கூடாது'
ADDED : ஏப் 29, 2025 06:37 AM
திருப்பூர்:
பா.ஜ., திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த மனு:
திருப்பூரில் தொழிலாளர் தினத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, சில தொழிற்சங்கங்கள், ஊர்வலம் நடத்துகிறோம் என்ற போர்வையில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் முக்கிய தலைவர்களை கொச்சைப்படுத்து கின்ற வகையில் வாகனங்களில் பேனர் கட்டி ஊர்வலம் சென்றனர்.
உலகமே மதிக்கின்ற தலைவர்களை கொச்சைப்படுத்தி, கேவலப்படுத்தும் உரிமை யாருக்கும் கிடையாது. பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதமாக உட்கருத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.
இரு ஆண்டுகளாக, போலீஸ் துறையிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இந்த முறை, இதுபோன்ற நிகழ்வு நடைபெற கூடாது என்பதற்காக, முன்கூட்டியே தெரியப்படுத்துகிறோம்.
சட்டம்-ஒழுங்கை நிலை நாட்ட வேண்டிய கடமை போலீஸ்துறைக்கு உள்ளதால், இந்த முறை இதுபோன்ற செயல்கள் நடக்காமல் போலீசார் பார்த்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

