ADDED : ஏப் 04, 2025 03:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம் அடுத்த அருள்புரத்தில், ம.தி.மு.க., முதன்மைச் செயலாளர் துரை பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
திருப்பூர் புறநகர் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார்.
புறநகர் மாவட்ட செயலாளர் மணி, மாநகர் மாவட்ட செயலாளர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, அருள்புரத்தில் உள்ள பகுதி நேர ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் கரைப்புதுார் ஊராட்சி துாய்மை பணியாளர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான விபத்து காப்பீடு அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மாநில அவைத் தலைவர் அர்ஜுனராஜ், இளைஞர் அணி துணை செயலாளர் ரத்தினசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

