/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தென்னைக்கு காப்பீடு செய்யுங்க! தோட்டக்கலைத்துறை அறிவுரை
/
தென்னைக்கு காப்பீடு செய்யுங்க! தோட்டக்கலைத்துறை அறிவுரை
தென்னைக்கு காப்பீடு செய்யுங்க! தோட்டக்கலைத்துறை அறிவுரை
தென்னைக்கு காப்பீடு செய்யுங்க! தோட்டக்கலைத்துறை அறிவுரை
ADDED : பிப் 11, 2025 11:38 PM

உடுமலை; குடிமங்கலம் வட்டார விவசாயிகள் தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்ய முன்வர வேண்டும் என தோட்டக்கலைத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
குடிமங்கலம் வட்டாரத்தில், 14 ஆயிரம் ெஹக்டேர் பரப்பில், தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது தோட்டக்கலைத்துறை சார்பில், தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் செல்வக்குமார் கூறியதாவது: தென்னை வளர்ச்சி வாரியம் மற்றும் தமிழக அரசின் பங்களிப்புடன், தென்னை பயிர் காப்பீட்டு திட்டம், இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் வாயிலாக நடப்பாண்டில் செயல்படுத்தப்படுகிறது.
இயற்கை மற்றும் பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விவசாயிகளுக்கு நிதி பாதுகாப்பு கிடைக்கும்.
இயற்கை பேரிடரால் ஏற்படும் தாக்கத்தை குறைத்து, விவசாயிகளை மறுநடவுக்கு ஊக்குவித்து தென்னை சாகுபடியை லாபகரமானதாக மாற்றுதல் உள்ளிட்ட நோக்கங்களை கொண்டு இக்காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு குடிமங்கலம் வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அல்லது தங்கள் பகுதி தோட்டக்கலை அலுவலர்களை விவசாயிகள் அணுகலாம்.
இவ்வாறு, தெரிவித்தார்.