/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரோட்டோர மண் அரிப்புக்கு முற்றுப்புள்ளி சிறப்பு திட்டத்தில் பணி தீவிரம்
/
ரோட்டோர மண் அரிப்புக்கு முற்றுப்புள்ளி சிறப்பு திட்டத்தில் பணி தீவிரம்
ரோட்டோர மண் அரிப்புக்கு முற்றுப்புள்ளி சிறப்பு திட்டத்தில் பணி தீவிரம்
ரோட்டோர மண் அரிப்புக்கு முற்றுப்புள்ளி சிறப்பு திட்டத்தில் பணி தீவிரம்
ADDED : அக் 03, 2024 04:55 AM

உடுமலை : திருமூர்த்தி அணை அருகே, ரோட்டோர மண் அரிப்பை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
உடுமலையில் இருந்து முக்கிய சுற்றுலா தலமாக உள்ள திருமூர்த்தி மலைக்கு செல்லும் ரோடு, மாவட்ட முக்கிய ரோடுகள் பிரிவின் கீழ், நெடுஞ்சாலைத்துறை உடுமலை உட்கோட்டத்தால் பராமரிக்கப்படுகிறது.
இந்த ரோட்டில், திருமூர்த்தி அணை படகுத்துறை முதல், குறிப்பிட்ட துாரத்துக்கு ரோட்டோர மண் அரிப்பு ஏற்படுவது தொடர்கதையாக இருந்தது. சரிவான பகுதியில், அணை கரையை ஒட்டி, மண் அரிப்பு ஏற்படுவதால், வாகன ஓட்டுநர்கள் நிலைதடுமாறி வந்தனர். எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியாததால், போக்குவரத்து நெரிசலும் நிலவியது.
இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நெடுஞ்சாலைத்துறை சார்பில், சிறப்பு திட்டத்தை செயல்படுத்த, 40 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இத்திட்டத்தின் கீழ், ரோட்டையொட்டி வடிகால் அமைப்பதுடன், லேசான சரிவு ஏற்படுத்தியுள்ளனர்.
அதில்,உயிரியல் முறையில், பரிந்துரைகள் பெறப்பட்டு, மண் அடுக்குகள் அமைத்து, புல் நடவு செய்வது உள்ளிட்ட பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.
நெடுஞ்சாலைத்துறை தாராபுரம் கோட்ட பொறியாளர் ராணி தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். வட கிழக்கு பருவமழை துவங்கும் முன், பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டது.
திட்ட பணிகள் குறித்து, உடுமலை உட்கோட்ட உதவி கோட்ட பொறியாளர் ராமுவேல், உதவி பொறியாளர் லோகேஸ்வரன் விளக்கமளித்தனர். நீண்ட காலமாக நிலவும் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இப்பணிகள் மேற்கொள்ளப்படுவதால், வாகன ஓட்டுநர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

