/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளிகளுக்கு இடையே கபடி: 26 அணிகள் பங்கேற்பு
/
பள்ளிகளுக்கு இடையே கபடி: 26 அணிகள் பங்கேற்பு
ADDED : ஜன 09, 2024 11:05 PM
உடுமலை:உடுமலையில் நடந்த, பள்ளிகளுக்கு இடையேயான கபடி போட்டியில், 26 மாணவ, மாணவியர் அணிகள் பங்கேற்றன.
பள்ளி அணிகளுக்கு இடையிலான கபடி போட்டி, உடுமலை வித்யாசாகர் கலை அறிவியல் கல்லுாரியில் நடந்தது.
போட்டியில், 16 மாணவர் அணிகள், 10 மாணவியர் அணிகள் என, மொத்தம், 26 அணிகள் பங்கேற்றன. சீனியர் பிரிவில், கொமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியர் அணி மூன்றாமிடம் பிடித்தது.
இம்மாணவியருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் நடந்தது. தலைமையாசிரியர் மாரியப்பன் தலைமை வகித்தார். தொடர்ந்து, மாவட்ட, மாநில போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறவும், வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. உடற்கல்வி ஆசிரியர் சந்திரபாபு, விஜயராகவன், சலுகாமா உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.

