/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செடி முருங்கை சாகுபடிக்கு ஆர்வம்; வழிகாட்டுதல் தேவை
/
செடி முருங்கை சாகுபடிக்கு ஆர்வம்; வழிகாட்டுதல் தேவை
செடி முருங்கை சாகுபடிக்கு ஆர்வம்; வழிகாட்டுதல் தேவை
செடி முருங்கை சாகுபடிக்கு ஆர்வம்; வழிகாட்டுதல் தேவை
ADDED : அக் 01, 2025 11:54 PM
உடுமலை; செடி முருங்கை சாகுபடிக்கு வழிகாட்டுதல் வழங்கி, சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும் என, உடுமலை பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம், மூலனுார் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில், பரவலாக முருங்கை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில், செடி முருங்கை எனப்படும் வீரிய ஒட்டு ரக மரங்கள் பராமரிப்பில், கூடுதல் வருவாய் கிடைத்தது. இதையடுத்து, பரவலாக இச்சாகுபடியில், ஈடுபட, அனைத்து பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அவ்வகையில், உடுமலை பகுதியில், காய்கறி சாகுபடி பிரதானமாக மேற்கொள்ளப்படும், ஆண்டியகவுண்டனுார், குட்டியகவுண்டனுார், சின்னப்பன்புதுார் உட்பட பகுதிகளில், செடி முருங்கையை பராமரித்து வருகின்றனர்.
அதில், ஊடுபயிராக தக்காளி, வெண்டை உட்பட காய்கறி சாகுபடியையும் மேற்கொண்டு கூடுதல் வருவாய் பெற்று வருகின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது:
தனிப்பயிராக செடி முருங்கை நடவு செய்து, ஊடுபயிராக தக்காளி, வெண்டை, கத்தரி போன்ற குறுகிய காலப் பயிர்களை பராமரிக்கிறோம்.
ஓராண்டுக்கு பிறகு, செடிகளை தரைமட்டத்திலிருந்து, சுமார் ஒரு மீட்டர் உயரத்தில் வெட்டி விட்டால், புதிய குருத்துக்கள் மீண்டும் வளரும்.
அதன்பின், 4 முதல் 5 மாதங்களில் காய்க்கத் தொடங்கும். ஒவ்வொரு காய்ப்புக்குப் பிறகும் செடியை வெட்டிவிட்டு மூன்று ஆண்டுகள் வரை மறுதாம்பு பயிராக பராமரிக்கலாம். பழ ஈக்கள், பூ மொட்டுத் துளைப்பான், கம்பளிப்பூச்சிகள் தாக்குதலுக்கு பரிந்துரை அடிப்படையில், தடுப்பு பணிகளை மேற்கொள்கிறோம்.
செடி முருங்கையில், ஆறு மாதங்களில் காய்கள் அறுவடைக்கு வரத்துவங்கும். தோட்டக்கலைத்துறை வாயிலாக வழிகாட்டுதல் வழங்கி, சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு, தெரிவித்தனர்.