/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தாயுமானவர்' திட்டம்: திட்டமிட்டபடி நடக்குமா? தேதியை மாற்ற எதிர்பார்ப்பு
/
'தாயுமானவர்' திட்டம்: திட்டமிட்டபடி நடக்குமா? தேதியை மாற்ற எதிர்பார்ப்பு
'தாயுமானவர்' திட்டம்: திட்டமிட்டபடி நடக்குமா? தேதியை மாற்ற எதிர்பார்ப்பு
'தாயுமானவர்' திட்டம்: திட்டமிட்டபடி நடக்குமா? தேதியை மாற்ற எதிர்பார்ப்பு
ADDED : அக் 01, 2025 11:54 PM
உடுமலை; வீடு தேடி ரேஷன் பொருள் வழங்கும் 'தாயுமானவர்' திட்டம் இம்மாதம் முதல் வாரம் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் இதை வேறு தேதிக்கு மாற்றம் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் கார்டுதாரர்களில், 70 வயதுக்கு மேற்பட்ட தனி நபர் கார்டு முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று ரேஷன் பொருள் வழங்கும் வகையில் 'தாயுமானவர்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதற்கிடையில், கடந்த 26ம் தேதி, கூட்டுறவு பதிவாளர் அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், அக்., மாதம் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் இதைச் செயல்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 3வது வாரத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளதால் ஒரு வாரம் முன்னதாக இதனை வழங்க முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த அறிவிப்பு ரேஷன் ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ரேஷன் கடைகளுக்கு வழக்கமாக மாதந்தோறும், 1ம் தேதி முதல் பொருட்கள் வழங்கப்படும். நேற்று ஆயுத பூஜை, இன்று (2ம் தேதி) காந்தி ஜெயந்தி அரசு விடுமுறை.
அடுத்த நாள், 3ம் தேதி வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை. இதனால், கடைகளுக்கு பொருட்கள் வருவதற்கு வாய்ப்பில்லை.
இந்நிலையில், 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில், வீடு தேடி ரேஷன் பொருள் வழங்குவது சாத்தியமில்லாததாக உள்ளது. பதிவாளர் அறிவுறுத்திய நாட்களில் பொருட்கள் வழங்க வாய்ப்பில்லை என்கின்றனர் ரேஷன் கடை ஊழியர்கள்.
தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:
மாத துவக்கத்தில் பொருட்கள் வந்து சேராத நிலையில், முதல் வாரம் வீடு தேடி ரேஷன் பொருள் வழங்குவது இயலாது. இதுதவிர, இம்மாதம், 5ம் தேதி மாநில பணியாளர் தேர்வும், 11ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வும் நடக்கிறது.
ரேஷன் கடை ஊழியர்கள் இந்த தேர்வுகளில் அதிகம் பேர் பங்கேற்பர். பதிவாளரின் இந்த அறிவிப்பை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பியுள்ளோம்.
மாவட்டம் வாரியாக இணைப்பதிவாளர்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி, உரிய பகுதிகளில் கூட இதனைப் பின்பற்ற நடவடிக்கை எடுக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.