/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விமான படையில் சேர விருப்பமா? கொச்சியில் ஆள் சேர்ப்பு முகாம்
/
விமான படையில் சேர விருப்பமா? கொச்சியில் ஆள் சேர்ப்பு முகாம்
விமான படையில் சேர விருப்பமா? கொச்சியில் ஆள் சேர்ப்பு முகாம்
விமான படையில் சேர விருப்பமா? கொச்சியில் ஆள் சேர்ப்பு முகாம்
ADDED : ஜன 24, 2025 10:10 PM
உடுமலை, ; விமானப்படையில் சேர விருப்பமுள்ள திருப்பூர் இளைஞர்கள், கொச்சியில் நடைபெற உள்ள ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.
இந்திய விமானப்படை ஆள் சேர்ப்பு முகாம், வரும், 28ம் தேதி முதல் பிப்., 6ம் தேதி வரை நடைபெற உள்ளது.
மெடிக்கல் அசிஸ்டென்ட் டிரேட் பிரிவுக்கு வரும் 29ம் தேதியும், மெடிக்கல் அசிஸ்டென்ட் பிரிவுக்கு, பிப்., 4ம் தேதியும், கொச்சி, எர்ணாகுளம் மகாராஜா கல்லுாரியில் ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது. மெடிக்கல் அசிஸ்டென்ட் டிரேட் தேர்வில், 2004, ஜூலை 3ம் தேதி முதல் 2008, ஜூலை 3ம் தேதிக்குள் பிறந்த, திருமணமாகாதவர்கள் பங்கேற்கலாம்; பத்தாம் பகுப்பு, பிளஸ் 2 அல்லது பார்மஸியில் டிப்ளமோ அல்லது பி.எஸ்.சி., கல்வித்தகுதி பெற்றிருக்கவேண்டும்.
மெடிக்கல் அசிஸ்டென்ட் தேர்வில், 2001, ஜூலை, 3ம் தேதி முதல், 2006, ஜூலை, 3ம்தேதிக்குள் பிறந்த திருமணமானவர்கள் பங்கேற்கலாம்; பார்மஸியில் டிப்ளமோ அல்லது பி.எஸ்.சி., படித்திருக்கவேண்டும். தேர்வு நாளில், அதிகாலை, 5:00 மணிக்கு செல்லவேண்டும்.
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த விருப்பமுள்ள, தகுதியான, முன்னாள் படைவீரர் குடும்பத்தைச்சேர்ந்தவர்கள், இளைஞர்கள், ஆட்சேர்ப்பு முகாமில் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு, கலெக்டர் அலுவலக ஐந்தாவது தளத்தில் அறை எண்: 523ல் செயல்படும் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.
இத்தகவலை, திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

