/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தன்னார்வ சட்டப்பணியாளராக சேவை செய்ய ஆர்வமா?
/
தன்னார்வ சட்டப்பணியாளராக சேவை செய்ய ஆர்வமா?
ADDED : அக் 17, 2025 11:47 PM
அவிநாசி: திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் அவிநாசி, ஊத்துக்குளி, காங்கயம், பல்லடம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய பகுதிகளில் வட்ட சட்டப் பணிகள் குழுவுக்கு, 43 நபர்கள் தன்னார்வ சட்டப் பணியாளர்களாக சேவை செய்ய தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இதில் பணிபுரிய ஆர்வம் உள்ளவர்கள் திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவிற்கு தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இது நிரந்தர பணி கிடையாது. தற்காலிகமானது. அடிப்படை சம்பளம் என்பது கிடையாது. அவரவர் சேவைக்கு தகுந்த சம்பளம் மட்டுமே அளிக்கப்படும்.
தன்னார்வ சட்டப் பணியாளர்கள், குறைந்தபட்சம் பள்ளி இறுதி வகுப்பு படித்திருக்க வேண்டும். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் உள்பட அரசு ஊழியர்கள், மூத்த குடிமக்கள், அங்கன்வாடி தொழிலாளர்கள், மருத்துவர்கள், மாணவர்கள், சட்டம் படிக்கும் மாணவர்கள், அரசியல் சேராத சேவை சார்ந்து உள்ள தொண்டு நிறுவனங்கள், மகளிர் குழுக்களின் உறுப்பினர்கள், சுய உதவிக் குழுக்கள் உறுப்பினர்கள் போன்றோர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விண்ணப்பத்தினை திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தின் https://tiruppur.dcourts.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வரும் 25ம் தேதி மாலை 5 மணிக்குள் செயலாளர், திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஏடிஆர் கட்டடம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், திருப்பூர் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். நேர்முக தேர்வு நவ. 7ம் தேதி நடைபெறுகிறது.