/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பண்ணைக்குட்டை அமைக்க ஆர்வம்; மானியம் வழங்க எதிர்பார்ப்பு
/
பண்ணைக்குட்டை அமைக்க ஆர்வம்; மானியம் வழங்க எதிர்பார்ப்பு
பண்ணைக்குட்டை அமைக்க ஆர்வம்; மானியம் வழங்க எதிர்பார்ப்பு
பண்ணைக்குட்டை அமைக்க ஆர்வம்; மானியம் வழங்க எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 30, 2025 07:59 PM

உடுமலை; விளைநிலங்களில் மழை நீரை சேகரித்தும், போர்வெல் தண்ணீரை இருப்பு செய்து பயன்படுத்த உதவும் பண்ணைக்குட்டைகள் அமைக்க, உடுமலை வட்டார விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், பருவமழையை ஆதாரமாகக்கொண்டு சாகுபடி மேற்கொள்ளப்படும் மானாவாரி நிலங்கள் அதிகளவு உள்ளது.
இத்தகைய நிலங்களில், மழை நீரை சேகரித்து, சாகுபடிக்கு பயன்படுத்த பண்ணைக்குட்டைகள் அமைக்க, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், வேளாண் பொறியியல் துறை உள்ளிட்ட துறைகளின் கீழ், பண்ணைக்குட்டை அமைக்க மானியமும் வழங்கப்பட்டு வந்தது.
தற்போது இத்தகைய பண்ணைக்குட்டைகளை, போர்வெல் தண்ணீரை இருப்பு வைத்து விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
விவசாயிகள் கூறுகையில், 'போர்வெல்களில் நீர்மட்டம் குறையும் போது, கிடைக்கும் குறைந்த தண்ணீரை பண்ணைக்குட்டைகளில் இருப்பு செய்து, செடிகளுக்கு பாய்ச்சுகிறோம். சீராக நீர் பாய்ச்ச இம்முறையை பின்பற்றுகிறோம். இவ்வகை குட்டைகள் அமைப்பதற்கான மானிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்' என்றனர்.

