/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சர்வதேச படகுப்போட்டி; சாதித்த இளைஞர்கள்
/
சர்வதேச படகுப்போட்டி; சாதித்த இளைஞர்கள்
ADDED : டிச 14, 2025 07:35 AM

தி ருப்பூர் மாவட்டம், அவிநாசியின் எல்லையில் அமைந்திருக்கிறது காவிலிபாளையம் கிராமம். இங்குள்ள ஏரி, 480 ஏக்கரில் பரந்து விரிந்திருக்கிறது.
உள்ளூர் மக்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன், ஈரோடு படகு சங்கத்தினரின் முயற்சியால், கடந்த மாதம், தமிழ்நாடு கனோயிங் மற்றும் கயாக்கிங் அமைப்பு சார்பில், மாநில அளவிலான படகு போட்டி, இந்த ஏரியில் நடந்தது.
பல மாவட்ட வீரர்களுடன் காவிலிபாளையத்தை சேர்ந்த தினேஷ்குமார், செல்வகுமார், வினீத் சபரிநாத், சூரியபிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
இதன் மூலம், தினேஷ்குமார் உள்ளிட்ட நான்கு வீரர்கள், உத்தராகண்டில், தெஹரி ஏரியில் நடந்த சர்வதேச படகு போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு பெற்றனர்; இதில், 22 நாடுகளில் இருந்து, 300 வீரர்கள் பங்கேற்றனர். நீர் விளையாட்டில் ஜாம்பவான்களாக விளங்கும் அவர்களோடு காவிலிபாளையம் இளைஞர்கள் திறமையை வெளிக்காட்டினர். வெற்றி இலக்கை எட்ட முடியாவிட்டாலும், நிர் ணயிக்கப்பட்ட இலக்கை தொட்டிருக்கின்றனர்.
தினேஷ்குமார் கூறியதாவது:
உத்தராகண்டில், பல்வேறு சர்வதேச போட்டிகளில் ஜொலிக்கும் வீரர்களுடன் பங்கேற்ற போது தான், நாம் இனி, எத்தனை விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை உணர முடிந்தது.பல வெளிநாட்டவர் தங்கள் பாரம்பரிய விளையாட்டாக, நீர் விளையாட்டை வைத்துள்ளனர்.
படகு முதற்கொண்டு, அதற்கான உடை என அனைத்தும் விலை அதிக முள்ளவை. நன்கொடையாளர்கள் நல்மனதால் அவை எங்களுக்கு கிடைத்தன. நீர் விளையாட்டில் சாதிப்பதன் வாயிலாக, இட ஒதுக்கீடு அடிப்படையில் அரசுப்பணி துவங்கி எதிர்காலம் ஜொலிக்கும் என்பதை உணர்ந்தோம்.
நீர் விளையாட்டில் இளம் தலைமுறையை உருவாக்கும் எண்ணத்தில், எங்கள் கிராமத்தில் சிறு பிள்ளைகளுக்கு பயிற்சி வழங்கி வருகிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
காவலிபாளையம் ஏரி: பயிற்சி மையமாக மாறுமா?: மேற்கு தமிழகத்தின் பெரிய ஏரியாக உள்ள காவிலிபாளையம் ஏரியில் நீர் விளையாட்டு பயிற்சிக்கான அனைத்து அம்சங்களும் உள்ளன. வரும் ஆண்டுகளில் காமன் வெல்த் போட்டி, கேலோ இந்தியா, தேசிய கிராமப்புற விளையாட்டு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட இருக் கின்றன; அவற்றில் பங்கெடுக்கும் வகையில் அவர்களை தயார்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
இந்த ஏரியை நீர்விளையாட்டு பயிற்சி மையமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை, மத்திய, மாநில அரசுகளின் விளையாட்டு ஆணையத்திடம் கோரிக்கையாக விடுத்துள்ளோம். காவிலிபாளையம் ஏரியை நீர் விளையாட்டு பயிற்சி மையமாக மாற்றும் கோரிக்கையை அனைத்து அரசியல் கட்சிகளின் கவனத்துக்கும் கொண்டு சென்று, அவர்களது தேர்தல் அறிக்கையில் இடம் பெற செய்வதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறோம்.
- பிரபு: செயலாளர்:

