/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சர்வதேச அமைதி தினம் பள்ளி மாணவர்கள் தியானம்
/
சர்வதேச அமைதி தினம் பள்ளி மாணவர்கள் தியானம்
ADDED : நவ 13, 2024 06:52 AM

உடுமலை : ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், சர்வதேச அமைதி தினத்தையொட்டி மாணவர்கள் தியானம் செய்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அமைதி தினம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கான இத்தினம் பல்வேறு அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்டது. உடுமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், சர்வதேச அமைதி தினத்தையொட்டி, சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
இத்தினம் சம்பந்தமாக பல்வேறு தகவல்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. மேலும், மாணவர்களுக்கு அமைதி தினம் பின்பற்றுவது குறித்து ஆசிரியர் கண்ணபிரான் விளக்கமளித்தார். தொடர்ந்து, அனைத்து உயிரினங்களின் நன்மையாக, மாணவர்கள் கண்களை மூடி ஒரு நிமிடம் மூச்சு பயிற்சி செய்தனர்.
இப்பயிற்சியினை மாணவர்கள் ஆர்வத்துடன் மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

