
பல்லடம்; சர்வதேச தரச் சான்று பெற்ற கோடங்கிபாளையம் ஊராட்சியில், அதிகாரிகள் குழுவினர் நேற்று தணிக்கையில் ஈடுபட்டனர்.
பல்லடம் ஒன்றியம், கோடங்கிபாளையம் ஊராட்சி, தமிழக அளவில், சிறந்த ஊராட்சிக்கான, ஐ.எஸ்.ஓ., 9001--2015 சர்வதேச தரச் சான்று பெற்றது. தமிழக அளவில், சிவகங்கை மாவட்டம், கீழடி ஊராட்சி முதல் இடத்தையும், கோடங்கிபாளையம் ஊராட்சி இரண்டாம் இடத்தையும் பெற்றன. தரச் சான்று பெற்றதற்கான சான்று, கடந்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்பட்டது.
நடப்பு ஆண்டு ஜூன் மாதம் இதை புதுப்பிக்க வேண்டும் என்பதால், இது தொடர்பான தணிக்கை மற்றும் கள ஆய்வு இன்று நடந்தது.
முன்னாள் ஊராட்சித் தலைவர் பழனிசாமி, ஊராட்சி செயலர் கண்ணப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, சர்வதேச தரச் சான்று குழுவினர், ஊராட்சி அலுவலக வசதிகள், பராமரிக்கப்பட்டு வரும் ஆவணங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து, அங்கன்வாடி மையம், அரசு பள்ளிகள்,
அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நாற்றுப்பண்ணை, குப்பை மேலாண்மை, நுாலகம், மரம் வளர்ப்பு உள்ளிட்டவை குறித்து கள ஆய்வு நடந்தது. இதனையடுத்து, குடிநீர், கழிவு நீர் கால்வாய், தெரு விளக்கு சாலைகள் உள்ளிட்டவை அடிப்படை வசதிகளும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. சர்வதேச தரச் சான்றுக்கு உரிய வகையில், ஊராட்சி நிர்வாகம், அதற்கான தகுதிகளை தொடர்ந்து பின்பற்றி வருகிறதா என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து,
கோடங்கிபாளையம் ஊராட்சி, ஐ.எஸ்.ஓ., 9001 --2015 தரச் சான்றை தக்க வைத்துள்ளது.