/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொழில் துவங்க கடன் 19 பேரிடம் நேர்காணல்
/
தொழில் துவங்க கடன் 19 பேரிடம் நேர்காணல்
ADDED : ஜூலை 17, 2025 10:50 PM

திருப்பூர்; தொழில் கடனுக்காக விண்ணப்பித்த 19 பேர், நேர்காணலில் பங்கேற்று, தொழில் துவங்குவதற்கான திட்ட அறிக்கை உள்பட ஆவணங்கள் சமர்ப்பித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்ட தொழில்மையம் சார்பில், நீட்ஸ் மற்றும் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் தொழில் கடனுக்காக விண்ணப்பித்தோருக்கான நேர்காணல், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. மாவட்ட தொழில்மைய மேலாளர் கார்த்திகைவாசன் தலைமை வகித்தார். மாவட்ட முன்னோடி வங்கி (கனரா) மேலாளர் துர்க்கபிரசாத், வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ் மற்றும் தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
நீட்ஸ் திட்டத்தில் கடன் கேட்டு விண்ணப்பித்த 4 பேரும்; அம்பேத்கர் தொழில்முன்னோடிகள் திட்டத்தில் கடன் கேட்டு விண்ணப்பித்த 23 பேரில், 15 பேர் என, 19 பேர் நேர்காணலில் பங்கேற்றனர். தொழில்முனைவோரிடமிருந்து, தொழில் சார்ந்த திட்ட அறிக்கை மற்றும் இதர ஆவணங்கள் பெறப்பட்டது. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, கடன் அனுமதி வழங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.