/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உள்நாட்டு தயாரிப்பான 'சாப்ட்புளோ' மெஷின் சகாய் ஆட்டோமேஷன் நிறுவனம் அறிமுகம்

ADDED : மார் 02, 2024 01:26 AM

திருப்பூர் சாய ஆலைகளுக்காக, 15 ஆண்டுகளாக தனித்துவமான சாயமிடும் இயந்திரங்களை வடிவமைத்து கொடுத்து, பாராட்டுக்களை பெற்றுள்ளது சகாய் ஆட்டோ மேஷன் நிறுவனம். தமிழ்நாடு, லுாதியான உட்பட, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு, இவ்வகை மெஷின்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து சாயமிடும் மெஷின்களை இறக்குமதி செய்த நிலைமாறி, திருப்பூரில் உற்பத்தியான மெஷினை, ஏற்றுமதி செய்யவும் அந்நிறுவனத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து, 'சகாய் ஆட்டோமேஷன்' நிறுவன நிர்வாக இயக்குனர் அருள்தாஸ் கூறியதாவது:
அதிக ஜி.எஸ்.எம்., அளவுள்ள துணிக்கு சாயமிடும் போது, சில குறைபாடு ஏற்படுகிறது. எங்களது 'எக்கோடெக்ஸ்' மெஷினில் எவ்வித குறைபாடும் வராது.
மேலும், ஒரு கிலோ துணிக்கு, 30 லிட்டர் தண்ணீரை பயன்படுத்தி, நேர்த்தியாகவும், மிக துல்லியமான நிறத்திலும் சாயமிடலாம். ஐரோப்பிய தொழில்நுட்பத்தை போலவே, திருப்பூரில் நேர்த்தியாக வடிவமைக்கிறோம்; விலையில் ஒப்பிடும் போது, மிகவும் குறைவாக வழங்குகிறோம்.
மெஷின்கள் இயங்கி கொண்டிருக்கும் போது, 'மொபைல்' போன் மூலமாக, வேறு எங்கு இருந்தும் கண்காணிக்கும் வகையில், புதிய தொழில்நுட்ப வசதியுடன், மெஷின் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆர்டர் கொடுத்த, 90 நாட்களுக்குள் மெஷின் வடிவமைத்து கொடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.