ADDED : டிச 11, 2024 05:05 AM
திருப்பூர்; திருப்பூர், அவிநாசி ரோடு, காந்தி நகரில் தமிழ்நாடு சர்வோதய சங்க வளாகம் உள்ளது.
ஊழியர் குடியிருப்பு பகுதியில் சில பாழடைந்த வீடுகள் பயன்பாடற்ற நிலையில் உள்ளதால், புதர் மண்டி பாம்புகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இங்கிருந்து சுற்றுச்சுவரைக் கடந்து பாம்புகள், பல சமயங்களில், அருகேயுள்ள சர்வோதய சங்க வீதியில் உள்ள வீடுகளில் புகுந்து அச்சுறுத்துவதாக புகார் எழுந்தது.
இது குறித்து அப்பகுதியினர் தொடர்ந்து புகார் செய்த நிலையில், அப்பகுதியில், சங்க செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டனர். பாம்புகளால் நிலவும் அச்சம் குறித்தும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.
குடியிருப்போர் மத்தியில் பேசிய சரவணன், ''இது குறித்து தீயணைப்பு மற்றும் வனத்துறைக்கும் சங்கத்தின் சார்பில் தகவல் அளித்து உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

