/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இலவச தடகள பயிற்சி பங்கேற்க அழைப்பு
/
இலவச தடகள பயிற்சி பங்கேற்க அழைப்பு
ADDED : ஏப் 15, 2025 06:11 AM
திருப்பூர்; திருப்பூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில், ஏழு இடங்களில் இலவச தடகளப் பயிற்சி முகாம் நடக்கிறது; ஆர்வமுள்ளவர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட தடகள சங்கத் தலைவர் சண்முகசுந்தரம் அறிக்கை: உடுமலை - அரசு கலைக்கல்லுாரி மைதானம், சாமளாபுரம் - ஏ.வி.ஏ.டி மேல்நிலைப்பள்ளி, ராக்கியாபாளையம் - ஐ வின் ட்ராக் ஸ்போர்ட்ஸ் கிளப், கருவலுார் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானம், 15 வேலம்பாளையம் - ஆர்.எஸ்.ஜி ஸ்போர்ட்ஸ் கிளப், கரடிவாவி - எஸ்.எல்.என்.எம் மேல்நிலைப்பள்ளி, காங்கயம் அத்லெடிக் அகாடமி பள்ளி மைதானம் ஆகிய ஏழு இடங்களில் இலவச தடகள பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
வரும், 27 முதல், மே, 24 வரை, 21 நாட்கள் காலை 6:00 முதல், 8:00 மணி வரை, மாலை 4:30 முதல் 6:30 மணி வரை, இரு நேரங்களில் பயிற்சி நடக்கும். பயிற்சி முகாமில் பங்கேற்க கட்டணம் இல்லை. பயிற்சி நிறைவில் சான்றிதழ் வழங்கப்படும்.
முகாமில் உடற்பயிற்சி, தடகளப்போட்டி தொடர்பான அடிப்படைப் பயிற்சி, உடற்திறன் மேம்பாட்டுப் பயிற்சி, யோகப்பயிற்சி வழங்கப்படும்.
அரசுப்பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இலவசப் பயிற்சி முகாமை பயன் படுத்திக் கொள்ளலாம்.