/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கட்டுரை போட்டியில் பங்கேற்க அழைப்பு
/
கட்டுரை போட்டியில் பங்கேற்க அழைப்பு
ADDED : ஜூன் 20, 2025 11:54 PM
பெருமாநல்லூர் : திருப்பூர், காமராஜர் - கலாம் கல்வி அறக்கட்டளை சார்பில், மாணவர்களுக்கு 'சங்க தமிழின் சரித்திர நுால்கள்' என்னும் தலைப்பில் கட்டுரை போட்டி நடக்கிறது.
கட்டுரை போட்டி 10 பக்கத்துக்குள் இருக்க வேண்டும். ஒரு தாளில் ஒரு பக்கம் மட்டுமே எழுத வேண்டும். ஆங்கில எழுத்துகள் பயன்படுத்தக்கூடாது.
மாணவர்கள் தங்கள் கட்டுரையை வரும் 25ம் தேதிக்குள் காமராஜர் கலாம் கல்வி அறக்கட்டளை, ஜெ.ஜெ., பழமுதிர் நிலையம், ஈரோடு பஸ் நிறுத்தம் பெருமாநல்லுார் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு 25 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசு 20 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசு 15 ஆயிரம் ரூபாய், நான்காம் பரிசு 10 ஆயிரம் ரூபாய், ஐந்தாம் பரிசு 5 ஆயிரம் ரூபாய் மற்றும் அனைத்து பரிசுக்கும் நினைவு கேடயமும் வழங்கப்படுகிறது.
பரிசளிப்பு விழா வரும் 29ல், பெருமாநல்லுார் லட்சுமி மஹால் திருமண மண்டபத்தில் நடக்கிறது. ஏற்பாடுகளை அறக்கட்டளை தலைவர் செல்வராஜ், செயலாளர் குமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.