/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பசுமை மாரத்தான் பங்கேற்க அழைப்பு
/
பசுமை மாரத்தான் பங்கேற்க அழைப்பு
ADDED : அக் 07, 2025 11:48 PM
திருப்பூர்; திருப்பூர் அருகே நடக்கும் பசுமை மாரத்தான் போட்டியில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அவிநாசி அருகேயுள்ள கணியாம்பூண்டி கே.சி.எம்., பவுண்டேசன் சார்பில், 'கோ கிரீன் மாரத்தான் கணியாம்பூண்டி 2025' என்கிற பெயரில், எஸ்.கே.எம்., மஹாலில் வரும் 12ம் தேதி காலை, 6:00 மணிக்கு துவங்குகிறது.
இரு பாலருக்கான எட்டு வயதுக்குள், ஒரு கி.மீ. - 11 வயதுக்குள், 2 கி.மீ. 14 வயதுக்குள், 3 கி.மீ. - 14 வயதுக்கு மேல் 6 கி.மீ. மற்றும் ஓப்பன் பிரிவில், 12 கி.மீ. மாரத்தான் நடக்கிறது.
போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு, 1.5 லட்சம் ரூபாய் வரை பரிசு வழங்கப்பட உள்ளது.
இதுதவிர பங்கேற்பவர்களுக்கு டீ சர்ட், மெடல், சான்றிதழ் மற்றும் உணவு வழங்கப்பட உள்ளது. கூடுதல் விபரங்களுக்கு, 94871 - 60063 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.