ADDED : அக் 07, 2025 11:47 PM

திருப்பூர்; சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடத்திக் கொண்டிருந்த போது, அவர் மீது காலணியை வீச முயற்சி நடந்தது.
இதில் ஈடுபட்ட வக்கீல் ராஜேஷ் கிேஷார், 70 என்பவரை காவலர்கள் தடுத்து அவரை அகற்றினர். இது, நீதிபதிகள் மற்றும் வக்கீல்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், பார் கவுன்சில் வக்கீல் ராஜேஷ் கிேஷார் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
நீதிபதி மீது காலணி வீசி தாக்குதல் நடத்த முயன்ற சம்பவத்தைக் கண்டித்து, அகில இந்திய வக்கீல் சங்கம் சார்பில், திருப்பூர் ஒருங்கிணைந்த கோர்ட் வளாக வாயிலில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க தலைவர் மணிவாளன் தலைமை வகித்தார். பொருளாளர் உதயசூரியன், மத்திய குழு உறுப்பினர் பொன்ராம் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வக்கீல்கள், தலைமை நீதிபதி மீதான தாக்குதல் முயற்சிைய கண்டித்து கோஷமிட்டனர்.