/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நல்லாறு துார்வாரும் பணி; மாநகராட்சி சார்பில் துவக்கம்
/
நல்லாறு துார்வாரும் பணி; மாநகராட்சி சார்பில் துவக்கம்
நல்லாறு துார்வாரும் பணி; மாநகராட்சி சார்பில் துவக்கம்
நல்லாறு துார்வாரும் பணி; மாநகராட்சி சார்பில் துவக்கம்
ADDED : அக் 07, 2025 11:46 PM
திருப்பூர்; புதர் மண்டி மழை நீர் செல்ல வழியில்லாமல் காணப்பட்ட நல்லாறு துார்வாரும் பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
கோவை மாவட்டம், அன்னுார் அருகே துவங்கும் நல்லாறு, திருமுருகன்பூண்டி, அங்கேரிபாளையம், ஆத்துப்பாளையம் பகுதிகளைக் கடந்து நஞ்ச ராயன் குளத்தில் சென்று சேர்கிறது. தற்போது வட கிழக்கு பருவ மழை துவங்கவுள்ள நிலையில் இந்த ஆற்றிலும், இதன் துணை ஓடைகளிலும் மழை நீர் பெருகி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நல்லாறு நீர்வழிப்பாதை முழுவதும் மண் திட்டுகள், முட்புதர்கள், செடி கொடிகள் பரவியும், பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியும் காணப்பட்டது. இதனால், மழை நீர் செல்ல வழியின்றி, தாழ்வான பகுதிகளில் புகுந்து விடும் அபாயம் உள்ளது. இதுகுறித்து 'தினமலர்' திருப்பூர் நாளிதழில் சுட்டிக் காட்டி செய்தி வெளியானது.
இதனால், மாநகராட்சி நிர்வாகம் சார்பில், மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த செல்லும் நல்லாற்றை துார்வாரி சுத்தம் செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது. நல்லாத்துப்பாளையம் பகுதியில் துார் வாரும் பணியை நேற்று மாநகராட்சி கமிஷனர் அமித் நேரில் சென்று ஆய்வு செய்தார்.