/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விளையாட்டு விடுதியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு
/
விளையாட்டு விடுதியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு
ADDED : ஏப் 19, 2025 11:23 PM
திருப்பூர்: விளையாட்டு போட்டிகளில் திறமை காட்டும் வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து, அவர்களுக்கு பயிற்சி அளித்து, மாநில, தேசிய அளவிலான போட்டிக்கு அனுப்பும் பணியை விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மேற்கொள்கிறது.
இதற்காக, வீரர், வீராங்கனையர் தங்கி பயிற்சி பெற, சென்னையில் மூன்று, கோவை, கடலுார், அரியலுார், திண்டுக்கல், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், பெரம்பலுார், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, திருவண்ணாமலை, திருச்சி, துாத்துக்குடி, தேனி, தஞ்சாவூர் உள்ளிட்ட, 28 இடங்களில் உள்ள விளையாட்டு விடுதி மைதானத்துடன் மாநிலம் முழுதும் உள்ளது.
இவற்றில் ஏழு, எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவ, மாணவியர் சேரலாம். ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் தங்கள் விபரங்களை www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில், மே, 5க்குள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். மாவட்ட அளவிலான போட்டிகள் மே முதல் வாரத்தில் துவங்கும். மேலும் விபரங்களுக்கு, ஆடுகளம் மொபைல் செயலி அல்லது 95140 00777 என்ற மொபைல் எண்ணில் விபரங்களை அறியலாம்.

