/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளியில் யோகா பயிற்சி மாணவர்களுக்கு அழைப்பு
/
பள்ளியில் யோகா பயிற்சி மாணவர்களுக்கு அழைப்பு
ADDED : ஜூலை 20, 2025 01:53 AM

திருப்பூர் : திருமுருகன்பூண்டி, அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு சார்பில், இலவச யோகா பயிற்சி முகாம் துவங்கியது. பள்ளி ஆசிரியை கவிதா வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் ராமகிருஷ்ணன், தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஈஸ்வரி, செயலாளர் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். யோகா ஆசிரியர் சங்கர், மாணவ, மாணவியருக்கு யோகாசன பயிற்சி வழங்கினார்.
இதில், 6,7 மற்றும், 8ம் வகுப்பு மாணவர்கள், 32 பேர் பங்கேற்றனர். இப்பயிற்சி முகாம் வாரந்தோறும், வெள்ளிக்கிழமை மதியம், 3:00 முதல் மாலை, 4:00 மணி வரை நடைபெறும்; விருப்பமுள்ள மாணவர்கள் பங்கேற்கலாம் என, தெரிவிக்கப்பட்டது.

