/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சட்ட உதவி மையத்தில் பணியாற்ற அழைப்பு
/
சட்ட உதவி மையத்தில் பணியாற்ற அழைப்பு
ADDED : ஏப் 05, 2025 12:10 AM
திருப்பூர்; திருப்பூர் மாவட்ட சட்ட உதவி மையத்தில் முதன்மை சட்ட ஆலோசகராக பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திருப்பூர் மாவட்ட சட்ட உதவி மையத்தில் முழு நேர சட்ட ஆலோசகராக பணியாற்ற ஒப்பந்த அடிப்படையில் இரண்டு ஆண்டு காலத்துக்கு பணி நியமனம் செய்யப்படவுள்ளது. மாத சம்பளம் 90 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
குறைந்த பட்சம் 21 வயதான, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நல்ல முறையில், எழுத, படிக்க, பேசத் தெரிந்திருக்க வேண்டும். பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் பயன்பாடு அறிந்திருக்க வேண்டும்.
வக்கீலாக பணியாற்றி வருவோர் விண்ணப்பிக்க விரும்பினால், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வக்கீலாகப் பணியாற்றியவராகவும், குற்றவியல் சட்டத்தில், உரிய அறிவாற்றலும் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 30 குற்ற வழக்குகளை கையாண்ட அனுபவம் அவசியம்.
இப்பணிக்கு வரும் ஏப்., 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மற்றும் சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவர், திருப்பூர் என்ற முகவரியில் உரிய முறையில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

