/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தண்டவாளம் கடப்பதை தடுக்க இரும்புத்தடுப்பு
/
தண்டவாளம் கடப்பதை தடுக்க இரும்புத்தடுப்பு
ADDED : மே 30, 2025 01:30 AM

திருப்பூர், ; ரயில்வே எல்லைக்குள் பிரவேசித்து, தண்டவாளத்தை பலரும் கடக்க முற்படுவதால், விபத்து ஏற்படுகிறது. இதனை தடுக்க தண்டவாளத்தின் இருபுறமும் இரும்பு தடுப்புகள் நிறுவப்பட்டு வருகிறது.
ரயில் படிக்கட்டில் இருந்து தவறி விழுபவர்களை விட, அத்துமீறி நுழைந்து தண்டவாளத்தை கடக்கும் போது, அஜாக்கிரதையாக விபத்தில் சிக்கி ஏற்படும் உயிரிழப்புகளே, அதிகமாக உள்ளது.
தண்டவாளத்தை கடப்பவர்களை தடுக்க, திருப்பூர் - வஞ்சிபாளையம் இடையே ரயில் தண்டவாளத்தை ஒட்டிய பகுதியில் இரும்பு தடுப்பு வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு முன் இடைவெளி விட்டு, காவிலிபாளையம் புதுார், கணியாம்பூண்டி பிரிவு வரை இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது.
தற்போது, சுரங்க பாலம் உள்ள பகுதிகளை தவிர, அனைத்து இடங்களிலும் இருபுறமிருந்து தண்டவாளத்தை கடந்து செல்ல வழியின்றி, தடுப்பு அமைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.