sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திருப்பூரில் இளம்பெண் தற்கொலை வரதட்சணை கொடுமை காரணமா?

/

திருப்பூரில் இளம்பெண் தற்கொலை வரதட்சணை கொடுமை காரணமா?

திருப்பூரில் இளம்பெண் தற்கொலை வரதட்சணை கொடுமை காரணமா?

திருப்பூரில் இளம்பெண் தற்கொலை வரதட்சணை கொடுமை காரணமா?


ADDED : ஆக 07, 2025 02:55 AM

Google News

ADDED : ஆக 07, 2025 02:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:திருப்பூரில் திருமணமாகி, 11 மாதத்துக்குள் பெண் தற்கொலை செய்துகொண்டதில், மாப்பிள்ளை வீட்டார் மீது, வரதட்சணை புகார் கூறிய பெண்ணி ன் உறவினர்கள், கமிஷனர் காரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர், தாராபுரம் ரோடு, கே.செட்டிபாளையத்தை சேர்ந்தவர் சுகந்தி; கணவர் இறந்துவிட்டார். இவரது மகள் ப்ரீத்தி, 27, பி.பி.ஏ., பட்டதாரி.

இவருக்கு 2024, செப்., ஈரோட்டை சேர்ந்த சதீஸ்வர் என் பவருடன் திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது, 120 சவரன் நகை, 25 லட்சம் ரூபாய் ரொக்கம், இன்னோவா கார் உள்ளிட்டவை வரதட்சணையாக கொடுக்கப்பட்டன.

கடந்த மாதம், 11ல் தாய் வீட்டுக்கு ப்ரீத்தி வந்தார். சின்னக்கரையில் உள்ள சாய ஆலையை, 1.10 கோடி ரூபாய்க்கு விற்பனை செய் ததன் மூலம், சுகந்திக்கு, 50 லட்சம் ரூபாய் கிடைத்தது.

தகவலறிந்த ப்ரீத்தியின் கணவர், ப்ரீத்தியை போனில் தொடர்பு கொண்டு, வீடு கட்டுவதற்காக, 50 லட்சம் ரூபாயை கேட்டுள்ளார். 'தனிக்குடித்தனம் சென்றால், பணத்தை வாங்கி வருகிறேன்' என, கணவரிடம் ப்ரீத்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது ப்ரீத்தி துாக்கு மாட்டி இறந்தார். ப்ரீத்தி தற்கொலை குறித்து அறிந்த குடும்பத்தினர், திருப்பூர் அரசு மருத்துவமனையில் திரண்டனர். வரதட்சணை கொடுமையால் ப்ரீத்தி தற்கொலை செய்துகொண்டதாக அவரது குடும்பத்தினர் கூறினர்.

உடுமலை அருகே கொல்லப்பட்ட போலீஸ் எஸ்.எஸ்.ஐ., சண்முகவேலின் உடலுக்கு மரியாதை செலுத்த வந்த, மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்குமார், மாநகர போலீ ஸ் கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோ ரது கார்களை ப்ரீத்தியின் குடும்பத்தினர் முற்றுகையிட்டனர்.

கமிஷனர் ராஜேந்திரனிடம், 'மாப்பிள்ளை குடும்பத்தினர் இதுவரை வரவில்லை. போலீசாரும் முறையாக விசாரிக்கவில்லை. நடவடிக்கை எடுத்தால் தான் சடலத்தை வாங்குவோம்' என, முறையிட்டனர். '

''ஆர்.டி.ஓ., விசாரித்து வருகிறார். முழுமையாக முடிந்த பின், நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, கமி ஷனர் ராஜேந்திரன் உறுதியளித்தார்.






      Dinamalar
      Follow us