/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காட்டுப்பன்றிகள் சுட்டுக்கொல்வது சாத்தியமா?
/
காட்டுப்பன்றிகள் சுட்டுக்கொல்வது சாத்தியமா?
ADDED : பிப் 07, 2025 10:24 PM
திருப்பூர்; வனத்தையொட்டிய விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் தொல்லை, விவசாயிகளைக் கலங்கடிக்கிறது.
வன எல்லை பகுதியில் இருந்து, 3 கி.மீ., வரை தென்படும் காட்டுப்பன்றிகளை கூண்டு வைத்து பிடித்து, மீண்டும் வன எல்லைக்குள் கொண்டு செல்வது, 3 கி.மீ., அப்பால் வரும் காட்டுப்பன்றிகளை சுட்டுக் கொல்வது என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
ஆனால், இரவு நேரத்தில் மக்கள் குடியிருப்புகள் அருகேயுள்ள விளை நிலங்களில் காட்டுப்பன்றிகளைச் சுட்டுக்கொல்வது சாத்தியமில்லை என்கின்றனர் விவசாயிகள்.
''வனப் பகுதியை ஒட்டிய இடத்தில் விவசாயிகள் பலர் மானாவாரி பயிர் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் வரை காட் டுப்பன்றி நடமாட்டத்தை கட்டுப்படுத்த, எவ்வித தடுப்பு நடவடிக்கையையும் அரசு அறிவிக்கவில்லை. இதனால் மானாவாரி விவசாயிகள் மிகுந்த பாதிப்பு அடைவர்.
அதிலிருந்து, 3 கி.மீ., வரை நடமாடும் காட்டுப்பன்றிகளை கூண்டு வைத்து பிடித்து, மீண்டும் வனப்பகுதிக்குள் விடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டம், கூட்டமாக வரும் காட்டு பன்றிகளை கூண்டு வைத்து பிடித்து, மீண்டும் வனப்பகுதிக்குள் விடுவது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத விஷயம்'' என்பது விவசாயிகளின் எண்ணம்.
அதேசமயம், காட்டுப்பன்றி பிரச்னைகள்அதிகம் உள்ள பகுதியில் வனவர், வருவாய் துறையினர், முக்கிய ஊர் பிரமுகர்கள் அடங்கிய குழு மாவட்ட கலெக்டர் தலைமையில் செயல்படப்போகிறது.
இக்குழு காட்டு பன்றிகளை சுடுவது தொடர்பாக முடிவு செய்யும். இதற்காக வனத்துறை, புதிய துப்பாக்கிகளை வாங்கி உள்ளது. வன பணியாளர்களுக்கு இதுதொடர்பாக பயிற்சி அளிக்கப்படுகிறது.