/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊருக்கு மட்டும் உபதேசம் சரிதானா?
/
ஊருக்கு மட்டும் உபதேசம் சரிதானா?
ADDED : ஆக 21, 2025 11:23 PM

திருப்பூர்; குப்பையை பொதுமக்கள் பிரித்து தர வேண்டும் என்று அறிவுறுத்தும் மாநகராட்சி, தன் அலுவலகத்தில் இருந்து இதனை துவங்க வேண்டும்.
திருப்பூர் மாநகராட்சியில் குப்பை அகற்றும் பிரச்னை கடும் சிக்கலை நிர்வாகத்துக்கும் பொதுமக்களுக்கும் ஏற்படுத்தியுள்ளது. குப்பை கழிவுகள் அகற்றும் பணியில் குப்பைகள் தரம் பிரித்து வழங்குவதில் பிரச்னை உள்ளது; குப்பைகளை தரம் பிரித்து வழங்கினால் அவற்றை கையாள்வதில் உள்ள சிக்கல் குறையும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது.
இதற்காக சில பகுதிகளில் பொதுமக்களும், தன்னார்வலர்களும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக குப்பை கூடை பயன்படுத்தி வீடுகளிலிருந்தே பிரித்து வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இந்த அறிவுரையை வழங்கும் மாநகராட்சி நிர்வாகம் அதன் அலுவலகத்திலேயே இதை பின்பற்றுவதில்லை என்பது கசப்பான உண்மை.
மாநகராட்சி மைய அலுவலக வளாகத்திலேயே சேகரமாகும் குப்பைகள் பிரித்து கூடைகளில் சேர்க்கப்படுவதில்லை. அனைத்து வகை குப்பை கழிவுகளும் ஒன்று சேர்த்து கூடையில் போட்டு குவித்து வைத்துள்ளனர். மக்களுக்கு அறிவுரை கூறும் மாநகராட்சி நிர்வாகம், தன்னிடமிருந்து இந்த நடவடிக்கையைத் துவங்க வேண்டும்.