/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் 2வது திட்டம் சாத்தியமா?
/
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் 2வது திட்டம் சாத்தியமா?
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் 2வது திட்டம் சாத்தியமா?
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் 2வது திட்டம் சாத்தியமா?
ADDED : ஏப் 26, 2025 11:34 PM
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில், கூடுதல் குளம், குட்டைகளை இணைக்கும் கோரிக்கை பிரதானமாக உள்ளது. ஏற்கனவே, செயல்பாட்டில் உள்ள திட்டத்தின் கீழ், சில இடங்களில், தண்ணீர் வினியோகம் சீராக இல்லை என்ற புகாரும் இருக்கிறது.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள, 1,047 குளம், குட்டைகளில் நீர் நிரப்பும் நோக்கில், 1,916 கோடி ரூபாய் மதிப்பில், இத்திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. திட்டத்தில் விடுபட்ட, 1,400 குளம் குட்டைகளையும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற துவங்கியிருக்கிறது. இதுகுறித்து, விவசாயிகளாகவும், அந்தந்த பகுதி அத்திக்கடவு அவிநாசி திட்ட போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்களாகவும் உள்ள சிலரது கருத்துகள், இங்கே இடம்பெற்றுள்ளன.