/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'நெற்பயிர் வீணாக்குவதா திராவிட மாடல்?'
/
'நெற்பயிர் வீணாக்குவதா திராவிட மாடல்?'
ADDED : அக் 13, 2025 01:08 AM

பல்லடம்:உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து கூறியதாவது:
நெற்களஞ்சியமான தஞ்சாவூர் மாவட்டத்தில், பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தாங்கள் சிரமப்பட்டு விளைவித்த நெற்பயிர்களை, அரசு நெல் கொள்முதல் மையங் களுக்கு விவசாயிகள் வழங்குகின்றனர். சில நாட்களாக, நெல் கொள்முதல் செய்யப்படாததால், விளைவித்த நெற்பயிர்களை இருப்பு வைக்க இடமில்லாமல், விவசாயிகள், விளைநிலங்களிலும், ரோட்டிலும் பாதுகாத்து வந்தனர். மழை பெய்ததால், விளைவித்த லட்சம் டன் நெற்பயிர்கள், மழையில் நனைந்து வீணாகின. தமிழக அரசின் அலட்சியமே இந்த அவலத்துக்கு காரணம். ஆய்வு மேற்கொள்ள வந்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியிடம், விவசாயிகள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது வேதனையாக உள்ளது.
விவசாயிகளுக்கான அரசு என்று விளம்பரப்படுத்திக் கொண்டு, விளைவித்த நெற்பயிர்களை மழையில் நனைய வைப்பது தான் திராவிட மாடல் ஆட்சியா? இந்தியாவிலேயே தமிழகம் தான் முதல் மாநிலம் என்று அரசு சுயவிளம்பரம் செய்து வரும் நிலையில், நெற்பயிர்கள் மழையில் நனைவது முதல்வருக்கு தெரியவில்லையா?
தேவையான குடோன்கள் ஏற்படுத்தி, நெற்பயிர்களை பாதுகாக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.