/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உழவர் நலத்துறை முகாம் கண்துடைப்பா?
/
உழவர் நலத்துறை முகாம் கண்துடைப்பா?
ADDED : ஜூலை 13, 2025 12:41 AM
பொங்கலுார் : பொங்கலுார் வடமலைபாளையத்தில் உழவர் நலத் துறை முகாம் நடந்தது.
இதில் வேளாண் துறை, தோட்டக்கலை துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஆனால், வேளாண் பொறியியல் துறை, கூட்டுறவு துறை ஆகிய துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்ளவில்லை. மேலும் பெரிய அளவில் விவசாயிகளுக்கு தகவல் சென்று சேராததால் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே விவசாயிகள் பங்கேற்றனர். துறை சார்ந்த அதிகாரிகளும் வரவில்லை. விவசாயிகளும் வரவில்லை. இந்த முகாம் எதற்கு என்று விவசாயிகள் கேள்வி எழுப்பினர். இந்த முகாமை ரத்து செய்துவிட்டு வேறொரு நாளில் முகாம் நடத்த வேண்டும். அதற்கு அனைத்து விவசாயிகளுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். முகாமில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.