/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திறப்பு விழா மட்டும் போதுமா? செயல்பாட்டுக்கு வருமா! பேரூராட்சி கூட்டத்தில், கவுன்சிலர் கேள்வி
/
திறப்பு விழா மட்டும் போதுமா? செயல்பாட்டுக்கு வருமா! பேரூராட்சி கூட்டத்தில், கவுன்சிலர் கேள்வி
திறப்பு விழா மட்டும் போதுமா? செயல்பாட்டுக்கு வருமா! பேரூராட்சி கூட்டத்தில், கவுன்சிலர் கேள்வி
திறப்பு விழா மட்டும் போதுமா? செயல்பாட்டுக்கு வருமா! பேரூராட்சி கூட்டத்தில், கவுன்சிலர் கேள்வி
ADDED : மார் 29, 2025 05:48 AM
அவிநாசி : அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்டில், வணிக வளாகம் திறப்பு விழா செய்யப்பட்டும் கூட, செயல்பாட்டுக்கு வரவில்லை என பேரூராட்சி கூட்டத்தில், காங்., கவுன்சிலர் குற்றம்சாட்டினார்.
அவிநாசி பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்களின் மாதாந்திர கூட்டம், பேரூராட்சி தலைவர் தனலட்சுமி தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் சண்முகம், சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி பங்கேற்றனர்.
கவுன்சிலர்கள் பேசியதாவது:
திருமுருகநாதன் (தி.மு.க.,): - கோடை காலம் துவங்கியுள்ளதால் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தால், துாய்மை பணியாளர்களுக்கு நிர்வாகம் ஓ.ஆர்.எஸ்., பவுடர் வழங்க வேண்டும். சொத்து வரி, குடிநீர் வரி ஆகியவை வசூலிக்கும் போது ஊழியர்கள் மட்டும் செல்லாமல், அதனை சார்ந்த அலுவலர்களும் உடன் ஒருவர் செல்ல வேண்டும். உடனடியாக குடிநீர் இணைப்பை துண்டிப்பது என்பது கூடாது.
ஸ்ரீதேவி (அ.தி.மு.க.,): தெருவிளக்குகள் பராமரிப்பு செய்வதற்காக இரண்டு ஒப்பந்ததாரர்கள் உள்ளனர். இதனால் கடும் குழப்பம் ஏற்படுகிறது. தெருவிளக்குகள் பழுதானால் அதனை சரி செய்து தர சொன்னால், இரண்டு ஒப்பந்ததாரர்களும் ஒருவர் மேல் ஒருவர் பழி போட்டு தப்பித்துக் கொள்கின்றனர். இதனால் மக்கள் மத்தியில் கவுன்சிலர்களுக்கு அவப்பெயர் உண்டாகிறது.
தங்கவேலு (தி.மு.க.,): சிந்தாமணி பஸ் ஸ்டாப் பகுதியில் உள்ள தனியார் மனமகிழ் மன்றத்தை பேரூராட்சி நிர்வாகத்தால் மூட முடியவில்லை. ஆனால், பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் பல மாதங்களாக கோரிக்கை வைக்கப்பட்டும் நிறைவேற்றப்படாத சிந்தாமணி தியேட்டர் எதிர்புறம் உள்ள ஜோதி ஒர்க் ஷாப் சந்து மற்றும் ரங்கசாமி டீக்கடை சந்து ஆகிய பகுதிகளில் ரோடு வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.
பேரூராட்சி தலைவர் தனலட்சுமி: எல்லா நேரங்களிலும் நுாறு சதவீதம் பொதுமக்களை திருப்தி படுத்த முடியாது. அனைத்து பகுதிகளிலும் குறிப்பிட்ட கால அளவில் பணிகள் நடைபெற்று வருகிறது. மனமகிழ் மன்றத்தை மூடுவது பேரூராட்சிக்கு சம்பந்தமில்லை. அது வேறு துறை. பொதுகழிப்பிடம் சம்பந்தமாக உரிய ஆய்வு செய்து உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
உதவி பொறியாளர்
வருவதேயில்லை
கோபாலகிருஷ்ணன் (காங்.,) பேசியதாவது:-
பேரூராட்சி கூட்ட அரங்கில் உள்ள கழிப்பறை, பழைய பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக கட்டடம், புதிய பஸ் ஸ்டாண்ட் பொதுக் கழிப்பிடம் ஆகியன நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டும், செயல்பாட்டிற்கு வரவில்லை. பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. எந்தப் பணிகள் நடந்தாலும் பேரூராட்சி பொறியாளர் சம்பந்தப்பட்ட பணியினை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், தலைவர், பொறியாளர் இருவரும் ஆய்வுக்கு செல்வதில்லை.
பழைய பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகம் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, 2024 டிச., 19ல் திறப்பு விழாவும் செய்யப்பட்டது. ஆனாலும், செயல்பாட்டுக்கு கொண்டு வராமல் கிடப்பில் போட்டுள்ளனர். பேரூராட்சி அலுவலகத்தில் பொறியாளர் பதவியில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரி பணிக்கு வருகிறாரா இல்லையா என்பதே தெரிவதில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.