/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பலியாகும் ஆடுகள்; இழப்பீடு கிடைக்குமா?
/
பலியாகும் ஆடுகள்; இழப்பீடு கிடைக்குமா?
ADDED : பிப் 17, 2025 11:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; வெள்ளகோவில், காங்கயம், தாராபுரம் பகுதியில் தெரு நாய்களால் கடிபட்டு இறக்கும் ஆடுகள் இறப்பது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும், கால்நடை வளர்ப்போருக்கான இழப்பீடு குறித்தும், கால்நடை பராமரிப்புத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுடன் கலெக்டர் கிறிஸ்துராஜ் நேற்று விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
இதற்கிடையே இழப்பீடு கோரி போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் கூறுகையில், 'இழப்பீடு தொடர்பான அரசாணை பெறுவதற்காக, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட கலெக்டர்கள் வாயிலாக பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. சில நாட்களில் இழப்பீடு விவகாரத்துக்கு தீர்வு கிடைக்கும்,' என தெரிவித்தனர்.

