/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேர் வாடல் இருக்கா; அதிகாரிகள் குழு ஆய்வு: தென்னை விவசாயிகளுக்கு அறிவிப்பு
/
வேர் வாடல் இருக்கா; அதிகாரிகள் குழு ஆய்வு: தென்னை விவசாயிகளுக்கு அறிவிப்பு
வேர் வாடல் இருக்கா; அதிகாரிகள் குழு ஆய்வு: தென்னை விவசாயிகளுக்கு அறிவிப்பு
வேர் வாடல் இருக்கா; அதிகாரிகள் குழு ஆய்வு: தென்னை விவசாயிகளுக்கு அறிவிப்பு
ADDED : மார் 15, 2024 12:28 AM

உடுமலை;தென்னை சாகுபடியில், வேர் வாடல் நோய் தாக்குதல் உள்ளதா என்பது குறித்து தோட்டக்கலைத்துறை சிறப்பு குழுவினர் நேரடி ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
அறிகுறிகள் தென்பட்டால் விவசாயிகள் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்களையும் அறிவித்துள்ளனர்.
உடுமலை வட்டாரத்தில் தென்னை பிரதான சாகுபடியாக உள்ளது. சுமார் 18,300 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது.
தற்போது, பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் தென்னையில் வேர் வாடல் நோய் அதிக அளவில் பரவி வருகிறது.
உடுமலை வட்டாரத்தில் இந்நோய் தாக்குதல் உள்ளதா என்பது தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கலாமணி தலைமையிலான குழுவினர் தென்னந்தோப்புகளில், நேரடி ஆய்வு செய்து வருகின்றனர்.
அக்குழுவினர் கூறியதாவது: தென்னை மரங்களில், எவ்வித காரணமும் இல்லாமல், அதிகமாக குரும்பைகள் உதிர்தல் நோய்த்தாக்குதலின் முதல் அறிகுறி ஆகும்.
மரத்திலுள்ள மட்டைகளின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, இலை மடல்களின் ஓரங்கள் கருகி வளைந்து மனிதனின் விலா எலும்பு போல தோற்றமளிக்கும். இந்நோயானது இளங்குருத்து பகுதியை தாக்கி குருத்துப்பகுதியை அழுகச்செய்யும்.
மேலும் குருத்து இலைகளிலும் இலை அறிகுறிகள் தென்படும். பூங்கொத்து கருகுதல் மற்றும் வேர் அழுகுதல் ஆகியவை இவற்றின் முக்கிய அறிகுறிகளாகும். இது கண்ணாடி இறக்கை மற்றும் தத்துப்பூச்சி போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகள் வாயிலாக பரவுகிறது.
நோய் கட்டுப்படுத்தும் முறைகள்
அளவுக்கு அதிகமாக தண்ணீர் பாய்ச்சக்கூடாது. நன்றாக வடிகால் வசதிசெய்ய வேண்டும். பசுந்தாள் உரங்களை வளர்த்து பூக்கும் முன் மடக்கி உழுதுவிட வேண்டும். ஊடுபயிர்களாக பாக்கு, நேப்பியர் பலா, மஞ்சள் ஆகியவற்றை பயிரிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
அதிக அளவில் தொழு உரம், உயிர் உரம் இட்டு போதுமான அளவு நீர் பாய்ச்ச வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட உரங்களான வேப்பம் புண்ணாக்கு 5 கிலோ, மக்கிய தொழு உரம் - 50 கிலோ, யூரியா 1.30 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 2 கிலோ, பொட்டாஷ் 3.5 கிலோ (ஒரு மரத்திற்கான அளவு) ஆகிய அனைத்தையும் இரண்டு சமபாகங்களாக பிரித்து 6 மாத இடைவெளியில் இரண்டு முறை இட வேண்டும்.
ஒரு மரத்திற்கு 50 கிராம் அஸோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா அல்லது பரிந்துரைக்கப்பட்ட உரங்களான வேப்பம் புண்ணாக்கு 5 கிலோ, மக்கிய தொழு உரம் - 50 கிலோ, யூரியா 1.30 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 2 கிலோ, பொட்டாஷ் 3.5 கிலோ (ஒரு மரத்திற்கான அளவு) ஆகிய அனைத்தையும் இரண்டு சமபாகங்களாக பிரித்து 6 மாத இடைவெளியில் இரண்டு முறை இட வேண்டும்.
நோய் பிற மரங்களுக்கு பரவுவதைத்தடுக்கும் வகையில் ஆண்டுக்கு, 10 காய்களுக்கும் குறைவாக காய்க்கும் மரங்களை வெட்டி அகற்ற வேண்டும். வெட்டிய குழியில் சுண்ணாம்பு இடவேண்டும். வெட்டிய மரத்தின் குழியில் மீண்டும் தென்னங்கன்று நடக்கூடாது.
வாடல் நோய் அறிகுறிகள் தென்னந்தோப்புகளில் தென்பட்டால் விவசாயிகள் உடுமலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
மேலும், விபரங்களுக்கு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனரை, 98429-50674 என்ற எண்ணிலும், உடுமலை உள்வட்ட விவசாயிகள் 95247-27052 என்ற எண்ணிலும், குறிச்சிக்கோட்டை உள்வட்ட விவசாயிகள் 88836-10449 என்ற எண்ணிலும், வாளவாடி வட்ட விவசாயிகள் 95854-24502 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அக்குழுவினர் தெரிவித்தனர்.

