ADDED : மார் 15, 2024 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:பள்ளி கல்வித்துறை சார்பில், தமிழ்நாடு மின்விசை மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் சார்பில், வருவாய் ஈட்டும் பெற்றோரை இழந்த அல்லது பெற்றோர் நிரந்தரமாக முடக்கம் அடைந்த, மாணவ, மாணவியருக்கு, நிதியுதவி வழங்கப்படுகிறது. அவ்வகையில், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாணவ, மாணவியர் 15 பேருக்கு, மொத்தம், 11.25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கால வைப்புத்தொகைக்கான பத்திரங்களை, கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கினார். சி.இ.ஓ., கீதா, டி.இ.ஓ., தேவராஜன், உதவி திட்ட அலுவலர்கள் சிவக்குமார், அண்ணாதுரை உட்பட கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

