/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
145 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கல்
/
145 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கல்
ADDED : நவ 05, 2025 12:16 AM
திருப்பூர்: திருப்பூர் தெற்கு மற்றும் பல்லடம் தாலுகாவில், 145 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கலெக்டர் மனிஷ் நாரணவரே முன்னிலை வகித்தார். அமைச்சர் சாமிநாதன், பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கி பேசினார்.
திருப்பூர் தெற்கு தாலுகா, உகாயனுார் கிராமம் வண்டிப்பாதை புறம்போக்கில், சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தில், 12 பேர், பல்லடம் தாலுகா, இச்சிப்பட்டி கிராமத்தில், பூமிதான நிலத்தில், 68 பேர், ப.வடுகபாளையம் கிராமம், வண்டிப்பாதை புறம்போக்கில் சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தில், 65 பேர் என, மொத்தம் 145 பேருக்கு ஒரு கோடியே 8 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. டி.ஆர்.ஓ. கார்த்திகேயன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் பங்கேற்றனர்.

