/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவசாயிக்கு தனித்துவ அடையாள எண் வழங்கல்: பதிவு செய்ய 15ம் தேதி கடைசி
/
விவசாயிக்கு தனித்துவ அடையாள எண் வழங்கல்: பதிவு செய்ய 15ம் தேதி கடைசி
விவசாயிக்கு தனித்துவ அடையாள எண் வழங்கல்: பதிவு செய்ய 15ம் தேதி கடைசி
விவசாயிக்கு தனித்துவ அடையாள எண் வழங்கல்: பதிவு செய்ய 15ம் தேதி கடைசி
ADDED : நவ 07, 2025 12:10 AM
திருப்பூர்: விவசாயிகளின் விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்து, தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட்டுவருகிறது. வரும் காலங்களில், மத்திய, மாநில அரசின் வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த அனைத்துவகை மானியங்களும், இந்த அடையாள எண் அடிப்படையிலேயே வழங்கப்படும். பி.எம்., கிஷான் திட்டத்தில், 21வது தவணை தொகை பெறுவதற்கும், இந்த அடையாள எண் பெறுவது அவசியமாகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், அடையாள எண் வழங்குவதற்காக, விவசாயிகளிடமிருந்து விவரங்கள் சேகரிக்கப்பட்டுவருகின்றன. மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும், வேளாண், தோட்டக்கலைத்துறை அலுவலகங்கள் வாயிலாக, விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கும் முகாம் நடத்தப்பட்டுவருகிறது.
மாவட்டத்திலுள்ள 1 லட்சத்து 7 ஆயிரத்து 892 விவசாயிகளில், இதுவரை 92 ஆயிரத்து 503 விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து பொது சேவை மையங்களிலும், இலவசமாக விவசாயிகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு அடையாள எண் வழங்கப்பட்டுவருகிறது.
இதுவரை அடையாள எண் பெறாத விவசாயிகள், தங்கள் ஆதார், நில ஆவண நகல், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் ஆகியவற்றுடன், பொது சேவை மையம் அல்லது வேளாண்மை உழவர் நலத்துறை வாயிலாக நடைபெறும் முகாம்களில் பங்கேற்று, பதிவு செய்துகொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் 15ம் தேதி, இப்பதிவுக்கான கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

