/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாளை பள்ளி உண்டு; கல்வித்துறை அறிவிப்பு
/
நாளை பள்ளி உண்டு; கல்வித்துறை அறிவிப்பு
ADDED : நவ 07, 2025 12:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: நாளை (8ம் தேதி) திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகள், கல்வி அலுவலகங்கள் செயல்படும் என மாவட்ட கல்வித்துறை அறிவித்துள்ளது.
கடந்த, அக். 20ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. தீபாவளி வாரத்தில், அக். 22ம் தேதி, மழை காரணமாக திருப்பூர் மாவட்ட பள்ளி கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
இதற்கு மாற்றாக வேறு ஒரு நாளில் பள்ளிகள் செயல்படுமென அறிவிக்கப்பட்டது. அதன்படி, நாளை (8ம் தேதி) திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகள், கல்வி அலுவலகங்கள் செயல்படும் என மாவட்ட கல்வித்துறை அறிவித்துள்ளது.

