/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சகோதயா சதுரங்க போட்டி: பிரன்ட்லைன் பள்ளி அசத்தல்
/
சகோதயா சதுரங்க போட்டி: பிரன்ட்லைன் பள்ளி அசத்தல்
ADDED : நவ 07, 2025 12:11 AM

திருப்பூர்: திருப்பூர் சகோதயா சார்பில், மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி, திருப்பூர் சுப்பையா பள்ளியில் நடந்தது.
போட்டியில், திருப்பூர் மாவட்ட அளவிலான, 40 பள்ளிகளைச் சேர்ந்த, 200 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில், பிரன்ட்லைன் மிலேனியம் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் வெற்றிகளை பெற்றனர். அவ்வகையில், இப்பள்ளியில் பயிலும், ஜெஸ்லின் ஜெனிஷா ஆகியோர், 16 வயது மாணவியர் போட்டியில் முதல் பரிசும், மாணவர்களுக்கான போட்டியில், விஷ்வாக் முதல் பரிசும், 14 வயது மாணவர் பிரிவில் சஸ்வின் ஆதித்யா, 4ம் பரிசும் பெற்றனர்.
சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர், அதற்கு உறுதுணையாக இருந்த சதுரங்க பயிற்சியாளர் முகேஷ் ஆகியோரை பள்ளி தாளாளர் சிவசாமி, செயலாளர் சிவகாமி, பள்ளி இயக்குனர் சக்திநந்தன், துணை செயலர் வைஷ்ணவி மற்றும் முதல்வர் லாவண்யா ஆகியோர் பாராட்டினர்.

