/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திறந்தவெளி, விவசாய நிலங்களில் கழிவுகளைக் கொட்டுவது குற்றம்
/
திறந்தவெளி, விவசாய நிலங்களில் கழிவுகளைக் கொட்டுவது குற்றம்
திறந்தவெளி, விவசாய நிலங்களில் கழிவுகளைக் கொட்டுவது குற்றம்
திறந்தவெளி, விவசாய நிலங்களில் கழிவுகளைக் கொட்டுவது குற்றம்
ADDED : ஜூன் 05, 2025 01:35 AM
திருப்பூரில் சாலையோரங்களில் குப்பைகளை சர்வசாதாரணமாக வீசிச்செல்வோர் பலர். இதேபோல், விவசாய நிலம், பொது இடங்களில் கழிவுகள் கொட்டப்படுகின்றன. பி.ஏ.பி., வாய்க்கால் உள்ளிட்ட நீர்நிலைகளிலும் குப்பைகள் கொட்டப்படுவது தொடர்ந்து நடக்கிறது.
இத்தகைய செயலலை குற்றம் என்கிறது சட்டம்.
* திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2016ன் படி, 'கழிவுகளை முறையாக சேகரித்து, தரம் பிரித்து அகற்ற வேண்டும். திறந்தவெளியில் கழிவுகளை கொட்டுவது, விதிமீறல். விவசாய நிலத்தில் கொட்டப்படும் கழிவுகள், நிலத்தடி நீர் மற்றும் சுற்றுப்புறத்தை மாசுபடுத்தும்'.* சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், 1986ன் படி, 'சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் எந்தவொரு செயலும் குற்றம். கழிவுகளை முறையாக அகற்றாமல் நிலத்தில் கொட்டுவது, சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் இது சட்ட மீறல்'.* தமிழ்நாடு நகராட்சி திடக்கழிவு மேலாண்மை மற்றும் கையாளுதல் விதி, 2007ம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை வலியுறுத்துவதாகவே உள்ளது.எனவே, நீர் நிலை, சாலையோரம் உள்ளிட்ட பொது இடங்கள், தனிநபரின் சொந்த நிலமாக இருப்பினும், அங்கு குப்பை, கழிவுகளை கொட்டுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு, மற்றவர்களையும் பாதிக்கும். நிலத்தடி நீர் மாசடைவதுடன், அந்த பகுதியில் விவசாயம் பாதித்து, குடிநீர் நஞ்சாக மாறும்.