/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை குழியில் விழுந்து குழந்தை பலியான பரிதாபம்
/
குப்பை குழியில் விழுந்து குழந்தை பலியான பரிதாபம்
ADDED : மே 16, 2025 12:55 AM
திருப்பூர், ;திருப்பூர் அருகே, குப்பை குழியில் தவறி விழுந்த ஒரு வயது பெண் குழந்தை உயிரிழந்தது.
உ.பி., யைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார். அவர் மனைவி காஜல். தம்பதிக்கு நான்கு வயதில் ஆர்கேஷ் என்ற மகனும், ஒரு வயதில் மஹி என்ற மகளும் உள்ளனர்.
இந்த குடும்பம், வீரபாண்டி, சுண்டமேடு பகுதியில், டையிங் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து, அங்குள்ள குடியிருப்பில் தங்கியுள்ளனர். நேற்று காலை ரமேஷ்குமார் வேலைக்குச் சென்று விட்டார். காஜல் வீட்டினுள் வேலை செய்து கொண்டிருந்தார்.
வீட்டு முன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மஹியை காணவில்லை. பதறிப் போன காஜல் அங்குமிங்கும் தேடியலைந்த போது, அங்குள்ள குப்பைகள் போட தோண்டி வைத்துள்ள குழியில், குழந்தை மஹி விழுந்து கிடந்தது தெரிந்தது.
குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனைக்குச் சென்ற போது, மஹி ஏற்கனவே இறந்தது தெரிந்தது. இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.