/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'மண்ணுக்கேற்ற மரம் நடுவதே சிறந்தது'
/
'மண்ணுக்கேற்ற மரம் நடுவதே சிறந்தது'
ADDED : ஆக 30, 2025 11:46 PM

பல்லடம்: கோவை ஈஷா மையம், காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பில், மரம் சார்ந்த விவசாயம் என்ற தலைப்பிலான கலந்தாய்வுக் கூட்டம், பல்லடம் அருகே, கோடங்கிபாளையத்தில் உள்ள உழவாலயம் அரங்கில் நடந்தது.
காவேரி கூக்குரல் இயக்கத்தின் நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா பேசுகையில், 'விவசாயிகள், அவரவர் விவசாய நிலங்களில் உள்ள மண்ணின் தன்மைக்கு ஏற்ற பயிர் சாகுபடியை மேற்கொள்ள வேண்டும்.
ஏனெனில், மண்தான் பயிர்களின் வளர்ச்சியை நிர்ணயிக்கின்றன. விளை நிலத்தில் உள்ள மண்ணை மாற்ற முடியாது; மரத்தை தான் மாற்றியாக வேண்டும். செடிகளுக்கு ஒவ்வாத மண் தன்மை இருந்தால், என்னதான் பராமரித்தாலும் இறுதியில் போதிய வளர்ச்சியும் உற்பத்தியும் இருக்காது. மண்ணின் ஆழத்தைப் பொறுத்து அவற்றின் வளர்ச்சி இருக்கும். ஏனெனில், சில மரங்கள் ஆழமாகவும், சில மரங்கள் கிடைமட்டமாகவும் வேர்களை கொண்டு செல்லும். சில தாவரங்களுக்கு குறைந்த அளவு தண்ணீரும், செலவற்றுக்கு அதிக தண்ணீரும் தேவைப்படும். அதற்கு ஏற்றார் போல் தண்ணீர் மேலாண்மையை தெரிந்து கொள்ள வேண்டும்' என்றார்.
திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளங்கோ, மண்டல ஒருங்கிணைப்பாளர் மதிசுதன், கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.